ADDED : டிச 28, 2025 06:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே மாயமான கல்லுாரி மாணவி குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நடுவீரப்பட்டு அடுத்த பாலுார் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகள் சந்தியா,19; இவர் கடலுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் 2 ம் ஆண்டு மாணவி. நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்ற சந்தியா வீடு திரும்பவில்லை.
தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து நடுவீரப்பட்டு போலீசில் சுந்தரமூர்த்தி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சந்தியாவை தேடி வருகின்றனர்.

