/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கல்லுாரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
கல்லுாரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : செப் 17, 2025 12:23 AM
விருத்தாசலம்; அரசு கல்லுாரியில் அடிப்படை வசதி கேட்டு, மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கல்லுாரி வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என மாணவர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன், கல்லுாரி முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதில், ஆத்தரிமடைந்த கல்லு ாரி மாணவர்கள் நேற்று காலை 10:30 மணியளவில், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லுாரி முதல்வர் முனியன், இரண்டு நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில், மாணவர்கள் அ னைவரும் காலை 10:45 மணிக்கு கலைந்து சென்றனர்.