UPDATED : நவ 05, 2026 11:44 PM
ADDED : நவ 04, 2026 03:47 PM

கடலுார்: கடலுார் ‘வி ஸ்கொயர்’ மாலில் தீபாவளி முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் களை கட்டியுள்ளது.
கடலுார் பாரதி சாலையில் உள்ள ‘வி ஸ்கொயர்’ மாலில் 3– பி.வி.ஆர்., திரை அரங்குகள், சிறுவர்களுக்கான விளையாட்டு சாதனங்கள், முன்னணி நிறுவனங்களின் ‘புட்’ கோட், ஜவுளிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், ஷாப்பிங் செய்வதற்கான முன்னணி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. மாலில் தீபாவளி முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ராக் அகாடமி ஆப் டான்ஸ் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடந்தது. இசைக்கு ஏற்றப்படி மாணவர்கள் நடனம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்களுக்கு வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷ் நினைவு பரிசு வழங்கினார். மால் இயக்குநர் சரவணன், ராக் அகாடமி ஆப் டான்ஸ் நிர்வாகி பூர்ணிமா, மால் பொது மேலாளர் தீனா பங்கேற்றனர்.
