/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
/
அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
ADDED : மே 01, 2025 04:29 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சி அரசு நடுநிலை பள்ளியில், பணிபுரிந்த தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் நேற்று பணிநிறைவு பெற்றார். இதையொட்டி, அவருக்கு, காணாதுகண்டான் கிராமத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பரமசிவம் தலைமை தாங்கினார்.
விழுப்புரம் டி.இ.ஓ., சேகர், டாக்டர் இ.கே.சுரேஷ்கல்விக்குழும தலைவர் சுரேஷ், முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் பூங்கோதை கொளஞ்சி, விருத்தாச்சலம் வட்டார கல்வி அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர். டாக்டர் இ.கே.சுரேஷ் கல்வி குழும டீன் கவி பாண்டியன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சுமதி ரவிச்சந்திரன், மற்றும் பட்டாதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உறவினர்கள் உட்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆசிரியர் வேம்பரசி கவிபாண்டியன் நன்றி கூறினார்.