/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தலைமை ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா
/
தலைமை ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா
ADDED : மார் 17, 2025 05:53 AM

பரங்கிப்பேட்டை, : பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் மற்றும் பரங்கிப்பேட்டை ஒன்றிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
பு.முட்லுாரில் நடந்த விழாவிற்கு, வட்டார தலைவர் சம்பத்குமார் தலைமை தாங்கினார்.
மாநில நிர்வாகிகள் தாஸ், குமாரகிருஷ்ணன், சண்முகம் முன்னிலை வகித்தனர்.
வட்டார செயலாளர் ராஜ்குமார் வரவேற்றார்.
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள் முருகன், ராம்குமார், சித்ரா, சசிகலா, இளவரசி, விஜயலட்சுமி, கலைச்செல்வி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில், வட்டார கல்வி அலுவலர்கள் உமாராணி, கந்தசாமி, ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் பாலமுரளி கிருஷ்ணன், இளங்கோ, பாபு, ஜெயசீலன், சரவணன், வெங்கட்ராமன், ஆசிரியர், ஆசிரியைகள் உட்பட பலர் பங்கேற்றனர்.