/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி துவக்கம்
/
சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி துவக்கம்
ADDED : டிச 28, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: தமிழகத்தில், மக்களின் வாழ்வாதாரத்திற்கு கேடு விளைவிக்கும். நிலத்தடி நீரை உரிஞ்சும் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் அருட்பா தொண்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
கடலுார் மாவட்டத்தில், கலெக்டர் சிபி ஆதித்திய செந்தில்குமார், கருவேல மரங்களை அகற்ற, ஆதி சேகரன் அருட்பா தொண்டு நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அதன் தலைவர், ஆதிசேகரன், தலைமையில், சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.