/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெரியக்குப்பம் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
/
பெரியக்குப்பம் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
ADDED : டிச 26, 2025 06:48 AM

கடலுார்: பெரியக்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வு அறிக்கை சமர்ப்பித்து வெற்றி பெற்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. மாநில அளவில் சமர்ப்பிக்கப்பட்ட 12, 866 ஆய்வு அறிக்கைகளில் மாவட்டத்திற்கு ஒரு சிறந்த ஆய்வு அறிக்கை வீதம் தேர்வு செய்யப்பட்டது.
இதில், கடலுார் அடுத்த பெரியக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு மாணவி பிரதிஷா, 9ம் வகுப்பு மாணவி வசுந்தரா ஆகியோர் பெரியகுப்பம் கடற்கரையை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீரின் தன்மை குறித்து ஆய்வு செய்து ஆய்வு அறிக்கை சமர்பித்து வெற்றி பெற்றனர். இது கடலுார் மாவட்டம் சார்பில் சிறந்த ஆய்வு அறிக்கையாக தேர்வு செய்யப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவிகளையும், வழிகாட்டியாக இருந்த ஆசிரியர் ஆரோக்கிய சுரேஷ் ஆகியோரை தலைமை ஆசிரியர் பழனிவேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

