ADDED : டிச 26, 2025 06:48 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நினைவு தினத்தையொட்டி வண்டிகேட்டில் உள்ள அவரது சிலைக்கு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட அவைத் தலைவர் குமார் தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ.,செல்வி ராமஜெயம், மாவட்ட பொருளாளர் சுந்தர் ஆகியோர் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்தனர்.
துணை செயலாளர் செல்வம், நகர செயலாளர் செந்தில்குமார், துணை செயலாளர் அரிசக்திவேல், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி, ஜெ ., பேரவை இணை செயலாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகையன், சிறுபான்மை பிரிவு செயலாளர் மீர்அமீது, நாகராஜன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் சந்திரசேகரன், பூபதி மற்றும் இளஞ்செழியன், சுரேஷ்பாபு, கர்ணா, சிவசிங்காரவேல், ராஜா பங்கேற்றனர்.

