/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகராட்சியில் சிறப்பு குழு கூட்டம் நடத்த ஆணையர் உத்தரவு
/
நகராட்சியில் சிறப்பு குழு கூட்டம் நடத்த ஆணையர் உத்தரவு
நகராட்சியில் சிறப்பு குழு கூட்டம் நடத்த ஆணையர் உத்தரவு
நகராட்சியில் சிறப்பு குழு கூட்டம் நடத்த ஆணையர் உத்தரவு
ADDED : அக் 25, 2025 07:05 AM
சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட ஒவ்வொரு வார்டு பகுதியிலும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், வரும் 28, 29 ஆகிய இரு தினங்களில், அந்தந்த வார்டு கவுன்சிலர் தலைமையில் சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும் என ஆணையர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நகராட்சி ஆணையாளர் மல்லிகா விடுத்துள்ள செய்தி குறிப்பில், சிதம்பரம நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும், அந்தந்த வார்டு கவுன்சிலர் தலைமையில், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில், வார்டு அளவிலான சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும்.
மேலும் அந்த வார்டில், அப்பகுதியின் வசதிக்கேற்ப, 28ஆம் தேதி அல்லது 29ஆம் தேதி, இக்கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
இக்கூட்டத்தில், வார்டில் உள்ள அடிப்படை வசதிகளான, குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, தெரு விளக்கு பராமரிப்பு சாலை பழுதுகள், பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் மழைநீர் வடிகால் பராமரிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதித்து, முக்கியமான முதல் 3 கோரிக்கைகள் நிறைவேற்றும் வகையில், தீர்மானம் நிறைவேற்றி நகராட்சி நிர்வாகத்திடம் வழங்க வேண்டும்.
அதன் அடிப்படையில், உடனடியாக மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

