/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் விருதை கமிஷனர் எச்சரிக்கை
/
குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் விருதை கமிஷனர் எச்சரிக்கை
குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் விருதை கமிஷனர் எச்சரிக்கை
குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் விருதை கமிஷனர் எச்சரிக்கை
ADDED : பிப் 09, 2024 06:42 AM
விருத்தாசலம்: குடிநீர் வரி செலுத்தாக, இணைப்புகள் மூன்று நாட்களில் துண்டிக்கப்படும் என, விருத்தாசலம் நகராட்சி கமிஷனர் பானுமதி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விருத்தாசலம் நகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் கட்டணம் மாதம் ரூ.50 என ஆண்டுக்கு ரூ.600 செலுத்த வேண்டும். ஆனால், முறையாக வரி செலுத்தாததால், ரூ.1.50 கோடி குடிநீர் கட்டண பாக்கி நிலுவையில் உள்ளது. பல முறை பொதுமக்களுக்கு அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, குடிநீர் கட்டணம் செலுத்தாத பொதுமக்கள் மூன்று நாட்களுக்குள் நகராட்சி கணினி மையங்களில் செலுத்த வேண்டும்.
மேலும் நகராட்சி வரி வசூல் செய்பவர் மற்றும் அந்தந்த பகுதி டேங்க் ஆபரேட்டர்களிடம் செலுத்தலாம். தவறினால் குடிநீர் இணைப்பு, மூன்று நாட்களில் துண்டிக்கபடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.