/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கவர்னரை கண்டித்து கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
கவர்னரை கண்டித்து கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 26, 2025 06:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பத்தில், இந்திய கம்யூ., சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் துரை தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் நாகராஜ், நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, அரிகிருஷ்ணன், முருகன், பாலு, வடிவேல் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர்கள் குளோப், சேகர், மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், மாவட்ட நிர்வாகக்குழு முருகையன், சக்திவேல், சுப்ரமணியன், பன்னீர்செல்வம், சிவக்குமார் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக கவர்னர் ரவி செயல்படுவதாக கூறி கருப்புக் கொடி ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.