ADDED : மார் 29, 2025 04:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் சமூகநலன் மற்றும் உரிமைத்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
பேரூராட்சி தலைவர் ஜெயமூர்த்தி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் பிரித்திவி வரவேற்றார். ஆத்மா திட்டக்குழு தலைவர் வெங்கட்ராமன் விழாவை துவக்கி வைத்தார்.
நெல்லிக்குப்பம் நகராட்சி சேர்மன் ஜெயந்தி கர்ப்பிணிகளுக்கு வளையல்கள் அணிவித்து சீர்வரிசை பொருட்கள் வழங்கினார்.
துணைத் தலைவர் கிரிஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகனாம்பாள், ரவிச்சந்திரன், மருத்துவ அலுவலர் ஆறுமுகம், தி.மு.க.,நகர செயலாளர் மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் 80 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசையும்,அறுசுவை உணவும் வழங்கபட்டன.