ADDED : ஜன 06, 2025 10:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் மாநகராட்சி பாலன் காலனியில், எம்.எல்.ஏ.,தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது.
கடலுார் மாநகராட்சி 34வது வார்டு, பாலன் காலனியில் எம்.எல்.ஏ.,தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 25லட்ச ரூபாய் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தார். மாநகர கமிஷனர் அனு, மேயர் சுந்தரி ராஜா முன்னிலை வகித்தனர். விழாவில் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், நிர்வாகிகள் முருகானந்தம், கருணையாளன், குமரேசன், குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.