/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வர் கோப்பைக்கான போட்டி; மாற்றுத்திறன் மாணவர்கள் அசத்தல்
/
முதல்வர் கோப்பைக்கான போட்டி; மாற்றுத்திறன் மாணவர்கள் அசத்தல்
முதல்வர் கோப்பைக்கான போட்டி; மாற்றுத்திறன் மாணவர்கள் அசத்தல்
முதல்வர் கோப்பைக்கான போட்டி; மாற்றுத்திறன் மாணவர்கள் அசத்தல்
ADDED : செப் 25, 2024 11:06 PM

விருத்தாசலம்: கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில், அரசு துறைகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி வீரர்கள் மற்றும் பொதுப்பிரிவு மாற்றுத்திறன் மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தது.
இதில், விருத்தாசலம் மாற்றுத்திறனாளி மாணவர் கவிநிலவன் குண்டு எறிதலில் முதலிடம் பிடித்தார். மாணவர் ஹரிதாஸ் 100 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாமிடம் பிடித்தார். மேலும், மேஜைப்பந்து இரட்டையர் மற்றும் ஒற்றையர் பிரிவில் மாணவர்கள் விஜய் சபரிநாதன், சிவா, சஞ்சய் ஆகியோர் இரண்டாமிடம் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர் இளவரசன், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜராஜசோழன், பிரகாசம், மனோகர், உடற்கல்வி இயக்குனர் மகாலட்சுமி ஆகியோர் வாழ்த்தினர்.