ADDED : அக் 16, 2024 06:56 AM
நீர் நிலைகளில் சீர்கேடு
சேத்தியாத்தோப்பு வெள்ளாறு அணைக்கட்டு நீர் நிலையில் மீன், கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
புவியரசு, சேத்தியாத்தோப்பு.
குடிநீர் பம்புப் பழுது
சி.என்.பாளையம் கொஞ்சிக்குப்பத்தில் போடப்பட்ட மினி மோட்டார் பம்ப் பழுதாகியதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
சிவசண்முகம், சி.என்.பாளையம்.
டாஸ்மாக் கடையால் இடையூறு
சேத்தியாத்தோப்பு ராஜீவ் சிலை அருகே, டாஸ்மாக் கடைக்கு செல்லும் குடிமகன் சாலையிலே வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கரிகாலன், சேத்தியாத்தோப்பு.
பஸ் நிலையத்தில் சுகாதார சீர்கேடு
விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பயணிகள் மிகுந்த சிரமமடைகின்றனர்.
- சிவக்குமார், விருத்தாசலம்.
விழுந்து விடும் நிலையில் டிரான்ஸ்பார்மர்
புதுச்சத்திரம் அடுத்த பகுதியில் பழுதடைந்து விழுந்துவிடும் நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் துாண்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமதாஸ், வயலாமூர்.