ஏரிக்கரையில் சுகாதார சீர்கேடு
பரிபூரணநத்தம் கிராமம் அருகே வீராணம் ஏரி கரையோரத்தில் மாட்டு சாணத்தை குவித்து வருவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
விக்கிரமாதித்தன், சேத்தியாத்தோப்பு.
பயணிகள் அவதி
விருத்தாசலம் தாலுகா அலுவலகம் எதிரில், பொதுப்பணித்துறை மாளிகை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல் மழை வெயில் காலங்களில் திறந்தவெளியில் பயணிகள் சிரமமடைந்து வருகின்றனர்.
கதிர்வேல், கருவேப்பிலங்குறிச்சி.
பாலத்தில் மழை நீர் தேக்கம்
நடுவீரப்பட்டு-பாலுார் இடையில் உள்ள கெடிலம் ஆற்றின் உயர்மட்ட பாலத்தில் செடிகள் வளர்ந்துள்ளதால் மழைநீர் தேங்குகிறது.
சந்திரன், நடுவீரப்பட்டு.
வேகத்தடை தேவை
கடலுார் முதுநகர் பள்ளிவாசல் தெருவில், வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. வேகத்தடை அமைக்க வேண்டும்.
நிஜாமுதீன், முதுநகர்.
பஸ் நிலையத்தில் விபத்து அபாயம்
விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் பகுதியில் வாகனங்கள் தாறுமாறாக நிற்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கண்ணன், பெரியவடவாடி.

