நிழற்குடை கட்டப்படுமா?
புதுச்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயமணிகண்டதேவன்-, வில்லயநல்லுார்.
சுகாதார வளாகம் தேவை
பெரியப்பட்டு பஸ் நிறுத்தத்தில் சுகாதார வளாகம் கட்ட, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீரபாண்டியன்-, பெரியப்பட்டு.
வாகன ஓட்டிகள் அவதி
விருத்தாசலம் கடைவீதி, ஜங்ஷன் ரோடு, கடலுார் சாலை ஆகிய சாலையோரங்களில் தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமித்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
அருண்குமார், விருத்தாசலம்.
வேப்பூர் சர்வீஸ் சாலையில் மணல் அதிகமுள்ளதால் வாகனங்கள் செல்லும் போது புழுதி பறந்து வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.
ராஜா, வேப்பூர்.
பயணிகள் அவதி
விருத்தாசலம் கடைவீதியில் தாறுமாறாக வாகனங்கள் நிற்பதால் பஸ் பயணிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.
முனுசாமி, விருத்தாசலம்.
சுகாதார வளாகம் பழுது
விருத்தாசலம் மேட்டுக்காலனியில் சுகாதார வளாகம் பராமரிப்பின்றி பழுதானதால், திறந்தவெளியை பொது மக்கள் பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது.
கண்ணபிரான், நல்லுார்.
தெரு விளக்கு எரியுமா?
பண்ருட்டி அடுத்த நரிமேடு பஸ் நிறுத்தத்தில் தெருவிளக்குகள் எரியாததால், இரவு நேரத்தில் அப்பகுதி சாலை இருளில் மூழ்கி உள்ளது.
லோகேஷ், நரிமேடு.

