எரியாத தெரு விளக்குகள்
கடலுார், புதுப்பாளையம் ராமசாமி சந்தில் தெரு விளக்குகள் எரியாததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குமார், கடலுார்
குப்பை குவியல்
கடலுார் பஸ் நிலையம் அருகில் ரயில்வே மேம்பாலத்தின் கீழே குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
பாண்டியன், கடலுார்
விபத்து அபாயம்
விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி எதிரில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
மணிகண்டன், கார்மாங்குடி
பழுதான குடிநீர் இயந்திரம்
சிறுபாக்கம் பஸ் நிலையத்திலுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் பழுதடைந்து பல மாதங்களாகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அருண், சிறுபாக்கம்
வேகத்தடை அமைக்கப்படுமா
நடுவீரப்பட்டு போலீஸ் ஸ்டேஷன் அருகில் வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலைச்செல்வன், நடுவீரப்பட்டு

