நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புறவழிச்சாலையில் துர்நாற்றம்
விருத்தாசலம் புறவழிச்சாலையில் கழிவுகள் குவிந்து துர்நாற்றம் வீசுவதால், வாகன ஓட்டிகள் முகம் சுழிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
சம்பத், வேப்பூர்.
கழிவறை தேவை
விருத்தாசலம் பெரியார் நகர் பஸ் நிறுத்தத்தில் இலவச கழிவறை அமைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருணாகரன், திட்டக்குடி.
ஆபத்தான நிலையில் மின் பெட்டி
கடலுார் ஜட்ஜ் பங்களா சாலையில், ஜட்ஜ் பங்களா எதிரில் மின்கலப்பெட்டி வைக்கப்பட்டுள்ள மேடை, இடிந்துவிழும் நிலையில் உள்ளது. அதிகாரிகள் உடனடியாக அதனை சீரமைக்க வேண்டும்.
சக்கரபாணி, கடலுார்.