நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையில் துர்நாற்றம்
விருத்தாசலம் மேட்டுக்காலனி சுகாதார வளாகம் பயன்பாடின்றி கிடப்பதால், புறவழிச்சாலையில் திறந்தவெளியில் இயற்கை உபாதையை கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
குமார், விருத்தாசலம்.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா
பெண்ணாடம் பழைய பஸ் நிலைய நிழற்குடையில் ஆக்கிரமித்துள்ள தள்ளுவண்டி கடைகள், இருசக்கர வாகனங்களை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜவேல், புக்குழி.
வேகத்தடையால் விபத்து
திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் கொசப்பள்ளம், துறையூர் பகுதிகளில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் அடிக்காததால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.
சிவா, கொசப்பள்ளம்.
நடைபாதை ஆக்கிரமிப்பு
விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள நடைபாதையில் ஆக்கிரமிப்பு காரணமாக பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
கல்யாணமுருகன், விருத்தாசலம்.