நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலையில் சுகாதார சீர்கேடு
விருத்தாசலம் புறவழிச்சாலையோரம் குவிந்து கிடக்கும் இறைச்சி மற்றும் கட்டட கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
காமராஜ், பூதாமூர்.
சாலையில் திடீர் பள்ளம்
பரங்கிப்பேட்டையில் இருந்து அன்னங்கோவில் செல்லும் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
நளமகாராஜன், பரங்கிப்பேட்டை.
வாகன ஓட்டிகள் பாதிப்பு
வயலாமூர் - பெரியகுமட்டி செல்லும் சாலையின் ஓரம் கருவேல மரங்கள் படர்ந்து வளர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
அண்ணாமலை, சேந்திரக்கிள்ளை.
குரங்கு தொல்லை
விருத்தாசலம் கல்லுாரி நகரில் சுற்றித் திரியும், குரங்குகளை பிடித்து காப்புகாட்டில் விட, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரன், விருத்தாசலம்.

