ADDED : நவ 30, 2024 04:47 AM
குடிநீர், கழிவறை வசதி தேவை
விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் பொது மக்களுக்கு கழிவறை, குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
சம்பந்தம், மந்தாரக்குப்பம்.
முட்புதர்கள் அகற்றப்படுமா?
விருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதி வளாகத்தில் மண்டியுள்ள முட்புதர்களை அகற்ற கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேல்முருகன், ஆலடி.
சுகாதார வளாகம் தேவை
பரங்கிப்பேட்டை சஞ்சிவிராயர்கோவில் தெருவில், சுகாதார வளாகம் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமரன், பரங்கிப்பேட்டை.
அரசு பஸ் இயக்க கோரிக்கை
சிறுபாக்கத்திலிருந்து நேரடியாக கள்ளக்குறிச்சி மற்றும் விருத்தாசலத்திற்கு அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேல்முருகன், சிறுபாக்கம்.
சிமென்ட் சாலை சேதம்
நல்லுார் ஒன்றியத்திலுள்ள ஐவதுகுடி ஊராட்சியிலுள்ள தெருக்களில் சிமென்ட் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
செல்வம், ஐவதுகுடி.

