ADDED : ஏப் 09, 2025 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பயணிகள் அவதி
விருத்தாசலம் பஸ் நிலைய வளாகத்தில் ஆட்டோ, தள்ளுவண்டிகள் தாறுமாறாக நிற்பதால் பயணிகள் மிகுந்த சிரமமடைகின்றனர்.
-குமார், விருத்தாசலம்.
விபத்து அபாயம்
விருத்தாசலம் -உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள பாத்திமா மெட்ரிக் பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியே செல்லும் போது விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
- அலெக்ஸ், விருத்தாசலம்.
சாலையில் பள்ளம்
விருத்தாச்சலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெரியநெசலுார் அருகே சாலையில் பள்ளம் உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.
-வேல், பெரியநெசலுார்.
போக்குவரத்து நெரிசல்
திட்டக்குடி பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்துமிடத்தில் தள்ளுவண்டி கடைகளும், இருசக்கர வாகனங்களும் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது.
-மகேஷ், திட்டக்குடி.