தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /கடலூர்/ புகார் பெட்டி:கடலுார்

 புகார் பெட்டி:கடலுார்

 புகார் பெட்டி:கடலுார்


ADDED : ஆக 20, 2026 02:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 02:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கழிவுநீர் வடிகால் தேவை?

பெண்ணாடம் பேரூராட்சி, புத்தர் தெரு 1,2 ஆகிய தெருக்களில் கழிவுநீர் வடிகால் வசதி ஏற்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராம்குமார், தளவாய்.

தெருவிளக்கு சீரமைக்கப்படுமா?

பெண்ணாடம் பேரூராட்சி, செந்துார் வேலன்நகர் பகுதியில் பழுதான தெருவிளக்குகளை மாற்றியமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரமேஷ், பெண்ணாடம்.

நிழற்குடை தேவை

விருத்தாசலம் கடைவீதி பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைத்துத் தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஸ்கர், விருத்தாசலம்.

குடிநீர் வீணாகிறது

புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே, கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகி வருகிறது.

பாஸ்கர், பெரியப்பட்டு

தெருவிளக்கு எரியவில்லை

திருப்பாதிரிப்புலியூர்-வண்டிப்பாளையம் சாலையில் தெருவிளக்கு எரியவில்லை. மாநகராட்சி நிர்வாகம் கவனிக்குமா?

ராஜா, போடிசெட்டி தெரு,

போலீசார் கவனிப்பார்களா?

திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தி வைத்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வெங்கடாஜலம், எஸ்.எஸ்.ஆர்., நகர்.

இருக்கைகள் அமைக்கப்படுமா?

பெண்ணாடம் பழைய பஸ் நிலைய நிழற் குடையில் இருக்கைகள் அமைக்க வேண்டும்.

ராமு, கோனுார்.

பஸ் நின்று செல்ல கோரிக்கை?

பெண்ணாடம் அடுத்த முருகன்குடியில் திருச்சி, கடலுார் செல்லும் அரசு பஸ் நின்று செல்ல போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமரன், முருகன்குடி.

அடிப்படை வசதி தேவை

விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்தில் பொது மக்களுக்கு சுகாதாரமான குடிநீர், கழிவறை வசதியை ஏற்படுத்திட வேண்டும்.

குமார், விருத்தாசலம்.

நடவடிக்கை தேவை

மந்தாரக்குப்பம் பகுதிகளில் பொது இடங்களில் புகை பிடிப்பது சமீப காலமாக அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

ராஜ்குமார், மந்தாரக்குப்பம்.

வேகத்தடை அமைக்க வேண்டும்

விருத்தாசலத்தில் கடலுார் நெடுஞ்சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முகப்பில், மாணவர்கள் நலன் கருதி வேகத்தடை அமைக்க வேண்டும்.

பன்னீர்செல்வம், விருத்தாசலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us