ADDED : அக் 10, 2024 04:05 AM
சாலையில் ஓடும் கழிவுநீர்
வேப்பூர் ஊராட்சியில், புது ரோடு மற்றும் தெற்கு தெரு பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால் இல்லாததால், சாலைகளில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
விஷ்ணு பிரகாஷ், வேப்பூர்.
குரங்கு தொல்லை
விருத்தாசலம் கல்லுாரி நகரில் சுற்றித்திரியும் குரங்குளை பிடித்து காப்புகாட்டில் விட, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பார்த்திபன், விருத்தாசலம்.
குளத்தில் கழிவுநீர் கலப்பு
மங்கலம்பேட்டை - கர்னத்தம் சாலையில் உள்ள சுண்ணாம்பு குட்டை குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்பேத்கர், மங்கலம்பேட்டை.
பேனர் கலாசாரம் அதிகரிப்பு
பண்ருட்டி அங்குசெட்டிப்பாளையத்தில் அதிகரித்து வரும் பேனர் கலாசாரத்தில், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
கலியமூர்த்தி, அங்குசெட்டிப்பாளையம்

