நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொது கழிப்பிட வசதி தேவை விருத்தாசலம் பெரியார் நகர் பஸ் நிறுத்தம் அருகே பொது கழிப்பிடம் கட்டித்தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவசீலன், விருத்தாசலம். தெருவிளக்கு அமைக்கப்படுமா பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி - ஜெயங்கொண்டம் சாலையில் கிராம சேவை மையம் அலுவலகம் வரை தெருவிளக்கு வசதி ஏற்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயபிரகாஷ், பெ.பொன்னேரி. பழுதான சாலையால் பாதிப்பு வேப்பூர் அடுத்த ஐவதுகுடி கிராமத்தில் தெருக்கள் தோறும் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
ராமர், ஐவதுகுடி. சாலையில் மண் குவியல் வேப்பூர் சர்வீஸ் சாலைகளில் புழுதி மணல் தேங்கி கிடப்பதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர்.
தருண், வேப்பூர்.

