நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போக்குவரத்துக்கு இடையூறு கடலுார், புதுப்பாளையம் நான்குமுனை சந்திப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
பவன்குமார், கடலுார். பொதுமக்கள் அவதி விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில், தெற்கு கோபுர வாயிலில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால், வேப்பூர் மார்க்கமாக செல்லும் பொது மக்கள் மிகுந்த சிரமமடைகின்றனர்.
பார்த்தசாரதி, விருத்தாசலம். நிழற்குடை சீரமைக்கப்படுமா? விருத்தாசலம் பெரியார் நகர் குளிர்சாதன நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்பரசன், விருத்தாசலம். சாலையில் மணல் குவியல் கடலுார் பாரதி சாலையில் இருபுறமும் மணல் குவிந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
கிருஷ்ணன், கடலுார்.

