UPDATED : ஆக 23, 2026 05:30 PM
ADDED : ஆக 23, 2026 05:03 PM
அ நிறம் | அளவு
திட்டக்குடி நகராட்சியில் தொழுதுார் சாலை, பெருமுளை சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்களை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கார்த்தி, திட்டக்குடி. நடவடிக்கை தேவை
பெண்ணாடம், சிலுப்பனுார் சாலை தெருவில் பொது மக்களுக்கு இடையூறாக சாலையில் அமர்ந்து மது அருந்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சபரி, பெண்ணாடம். சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுமா?
பெண்ணாடம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தனசேகரன், பெ.பொன்னேரி.] விபத்து அபாயம் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் தாறுமாறாக திரும்பும் கனரக வாகனங்களால், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
- கோவிந்தராஜ், விருத்தாசலம்.
