ADDED : ஆக 23, 2026 05:11 PM
சிதம்பரம்: சிதம்பரத்தில் நண்பரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம், காமராஜர் நகரை சேர்ந்தவர் அருண், 38; கார் மெக்கானிக். இவருக்கும், சிதம்பரம் காரிய பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சிவா (எ) உடப்பு சிவா என்பவருக்கும், கடந்த, 4 ஆண்டுகளாக பழக்கம் உள்ளது.
இந்நிலையில் சிவா பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு கடந்த இரு ஆண்டுகளாக சிறையில் இருந்துள்ளார்.
அவர் சிறையில் இருந்தபோது, அருண் சென்று பார்க்கவில்லை என்ற காரணத்திற்காக, கடந்த 21ம் தேதி இரவு அவரது வீட்டிற்கு சென்ற சிவா, பெட்டிக்கடை அரவிந்தன், கணேஷ் மற்றும் அடையாளம் தெரியாத சிலருடன் சேர்ந்து, அருணை கண்டமங்கலம் ரயில்வே கேட் அருகே அழைத்து சென்றார். அங்கு அவரை தாக்கி, பைக் மற்றும் மொபைல் போனை பறித்து, ரூ.20 ஆயிரம் கேட்டு மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
அவர்களிடமிருந்து தப்பிய அருண், சிதம்பரம் நகர போலீஸ் ஸ்டேஷனில் புகாரின்பேரில், வழக்கு பதிந்த போலீசார், முத்துமாணிக்கன் நாடார் தெருவை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் அரவிந்தன் (எ) பெட்டிக்கடை அரவிந்தன், 29; சிதம்பரம் எம்.ஜி.ஆர்., நகர், கணேஷ் (எ) குறவ கணேஷ், 27; ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தலைமறைவாக உள்ள வழக்கில் சிவா (எ) உடப்பு சிவா மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
