தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /கடலூர்/ புகார் பெட்டி...கடலுார்

 புகார் பெட்டி...கடலுார்

 புகார் பெட்டி...கடலுார்


ADDED : செப் 02, 2026 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 01:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போக்குவரத்துக்கு இடையூறு

கடலுார், புதுப்பாளையம் கடைத் தெரு நான்கு முனை சந்திப்பில் மாலை நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.

சோமு, கடலுார்.

வாகன ஓட்டிகள் அவதி

கடலுார் அண்ணாபாலத்தில் இருபுறமும் மணல் குவிந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

முத்து, கடலுார்.

இருண்டு கிடக்கும் சாலை

திருப்பாதிரிப்புலியூர் - வண்டிப்பாளையம் சாலை தெருவிளக்குகள் எரியாமல் இருண்டு கிடக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கதிரவன், வடுகப்பாளையம்.

பாராக மாறி வரும் வணிக வளாகம்

வடலுார் பஸ் நிலையத்தின் மேல் தளத்தில் கடைகள் பூட்டி கிடப்பதால், சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்க நகராட்சி மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தர், இந்திரா நகர்.

குடிநீர் தொட்டி அமைக்கப்படுமா?

பெண்ணாடம் பேரூராட்சி, வேலன் நகரில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருள், பெண்ணாடம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us