/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அதிகாரிகள் மீது புகார்: மக்கள் திரண்டதால் பரபரப்பு
/
அதிகாரிகள் மீது புகார்: மக்கள் திரண்டதால் பரபரப்பு
அதிகாரிகள் மீது புகார்: மக்கள் திரண்டதால் பரபரப்பு
அதிகாரிகள் மீது புகார்: மக்கள் திரண்டதால் பரபரப்பு
ADDED : ஜூலை 30, 2025 07:10 AM

நெல்லிக்குப்பம்: பட்டா வழங்குவதை அறநிலைத்துறை அதிகாரிகள் தடுப்பதாக கூறி போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது.
நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் பல ஆண்டுகளாக 95 குடும்பத்தினர் வீடு கட்டி வசிக்கின்றனர். இவர்கள் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென போராடி வருகின்றனர்.
இந்த இடம் நடனபாதேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது என்பதால் பட்டா வழங்க முடியாது என ஹிந்து அறநிலைத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவில் செயல் அலுவலர் தேவகி, கணக்கர் சரவணன், கவுன்சிலர் செல்வகுமார் ஆகியோர் பட்டா கொடுப்பதை தடுப்பதாக கூறி அவர்கள் மீது புகார் அளிக்க நெல்லிக்குப்பம் ஸ்டேஷனில் நேற்று திருக்கண்டேஸ்வரம் பகுதி திரண்டதால் பரபரப்பு நிலவியது.
இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பட்டா விவகாரம் தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகளிடம் பேசிக் கொள்ளுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.