/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலீஸ் ஸ்டேஷனில் புகார்கள் மீது தீர்வு முகாம்
/
போலீஸ் ஸ்டேஷனில் புகார்கள் மீது தீர்வு முகாம்
ADDED : ஏப் 14, 2025 11:46 PM

நெல்லிக்குப்பம், ; நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனுக்கள் மீது தீர்வு காணாமல் நிலுவையில் உள்ள புகார்கள் மீது தீர்வுகானும் முகாம் நடந்தது.
முகாமிற்கு இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி, புகார்கள் குறித்து விசாரனை செய்தார். நெல்லிக்குப்பம் அடுத்த பண்ணைகுச்சிபாளையம் பாரதி நகரை சேர்ந்த காசி என்பவர் வீட்டில் நாட்டு நாய் வளர்த்து வருகிறார்.இந்த நாய் அதே பகுதியை சேர்ந்த ராஜா மகன் மாணிக்கவேல்,10 என்பவரை 3 முறையும்,மகள் லீலாவதியை ஒரு முறையும் கடித்துள்ளது.மேலும் 30 பேரை அந்த நாய் கடித்துள்ளது.
இதுபற்றி ராஜா கடந்த ஜனவரி மாதம் கொடுத்த புகார் மீது தீர்வு காணப்படவில்லை.நேற்று இந்த மனு விசாரனைக்கு வந்தது.நாய் கடித்ததால் பாதித்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதோடு நாயை கட்டி போட்டு வளர்க்க வேண்டும்.நாய் உரிமையாளர் மீது வழக்கு பதிந்து கைது செய்ய வலியுறுத்தினர்.மேளாவில் 10 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.