/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதுச்சேரியில் முழு அடைப்பு: கடலுாரில் பஸ்கள் நிறுத்தம்
/
புதுச்சேரியில் முழு அடைப்பு: கடலுாரில் பஸ்கள் நிறுத்தம்
புதுச்சேரியில் முழு அடைப்பு: கடலுாரில் பஸ்கள் நிறுத்தம்
புதுச்சேரியில் முழு அடைப்பு: கடலுாரில் பஸ்கள் நிறுத்தம்
ADDED : மார் 09, 2024 03:09 AM

கடலுார்: புதுச்சேரியில் நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தால், கடலுாரில் இருந்து புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.
புதுச்சேரியை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். சிறுமியின் இறப்பிற்கு நீதி கேட்டு அ.தி.மு.க., மற்றும் இண்டியா கூட்டணி சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் கடலுாரில் இருந்து புதுச்சேரிக்கு பஸ்கள் இயக்கப்படாமல், ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால், கடலுார் பஸ் நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் புதுச்சேரிக்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
கடலுாரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு செல்லும் பஸ்கள் விழுப்புரம் மார்க்கமாக இயக்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் நலன்கருதி கடலுார் போக்குவரத்து கழகம் சார்பில் 3 பஸ்கள் மட்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.
அந்த அரசு பஸ்களில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஆட்டோ, கார், வேன் ஆகியவற்றில் பொதுமக்கள் ஏறி சென்றனர். ஆட்டோக்களில் வழக்கமாக கடலுாரில் இருந்து மகாத்மா காந்தி மருத்துவமனை வரை செல்ல 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டும். ஆனால், நேற்று 50 முதல் 80 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது.

