ADDED : மார் 05, 2024 06:06 AM

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.
ஸ்ரீமுஷ்ணம் அருகே கொக்கரசன்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் ராஜன். இவர் பணி ஓய்வு பெற்றதையடுத்து, பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
முன்னாள் புவனகிரி எம்.எல்.ஏ., சரவணன் தலைமை தாங்கினார். த.வா.க., மாநில மதியுரை குழு உறுப்பினர் பாலகுருசாமி வரவேற்றார்.
தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் தங்க ஆனந்தன், கோவிந்தராஜன், முத்துசாமி, தி.மு.க. மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு தலைவர் வாசுராஜேந்திரன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் கருணாநிதி, பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ்குமார், த.வா.க.தலைமை நிலைய செயலாளர் கண்ணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெயசந்திரன், வட்டார கல்வி அலுவலர்கள் ஸ்ரீமுஷ்ணம் மன்னர்மன்னன், இந்திரா, காட்டுமன்னார்கோவில் அறிவழகன், கவிஞர் அறிவுமதி, காங். மாவட்ட தலைவர் செந்தில்நாதன், பா.ம.க. மாநில துணைத் தலைவர் சந்திரபாண்டியன் வாழ்த்துரை வழங்கினர்.
ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராஜன் ஏற்புரை வழங்கினார்.
ஆசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

