/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜான்டூயி பள்ளியில் பயிற்சி நிறைவு
/
ஜான்டூயி பள்ளியில் பயிற்சி நிறைவு
ADDED : மே 05, 2025 06:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு; பண்ருட்டி ஜான்டூயி பள்ளியில் கோடைகால பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
பண்ருட்டி ஜான்டூயி பள்ளிகளில் ஹிந்தி, ஓவியம், கைப்பந்து, கோ-கோ, டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து, சதுரங்கம், அபாகஸ், சிலம்பம், கராத்தே, பரதநாட்டியம் ஆகியவை கோடை கால பயிற்சியாக அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது.
பள்ளி தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார். முதன்மை முதல்வர் வாலெண்டினா லெஸ்லி, இணைச் செயலாளர் நிதின் ஜோஷ்வா ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள் வழங்கி பாராட்டினர். இப்பள்ளியில் பிரிட்ஜ் கோர்ஸ் வகுப்புகள் நாளை 5 ம் தேதி முதல் வரும் 15ம் தேதி வரை நடக்கிறது.