/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., சி.எஸ்.ஆர்., நிதியில் ஆதிதிராவிடர் பள்ளிக்கு கணினி
/
என்.எல்.சி., சி.எஸ்.ஆர்., நிதியில் ஆதிதிராவிடர் பள்ளிக்கு கணினி
என்.எல்.சி., சி.எஸ்.ஆர்., நிதியில் ஆதிதிராவிடர் பள்ளிக்கு கணினி
என்.எல்.சி., சி.எஸ்.ஆர்., நிதியில் ஆதிதிராவிடர் பள்ளிக்கு கணினி
ADDED : டிச 20, 2024 04:30 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த தர்மநல்லுார் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் நெய்வேலி என்.எல்.சி., இந்தியா நிறுவன சி.எஸ்.ஆர்., நிதியில் கணினி வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மனோகர் தலைமை தாங்கினார். என்.எல்.சி,, இந்தியா நிறுவன இரண்டாம் சுரங்கம் முதன்மை மேலாளர் சஞ்சீவி, சமூக பொறுப்புணர்வு ஆலோசகர் சீனிவாசன், ஆதிதிராவிடர் நலத்துறை மண்டல துணை இயக்குனர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.
விழாவில் நெய்வேலி என்.எல்.சி., இந்தியா நிறுவன சுரங்கம் மற்றும் நில எடுப்பு செயல் இயக்குனர் ஜாபர்ரோஸ் சிறப்புரையாற்றி பள்ளி மாணவர்களுக்காக ஆசிரியர்களிடம் கணினியை வழங்கினார்.
விழாவில் வளையமாதேவி, எறும்பூர் அரசு, பள்ளிகள் வைத்துள்ள கோரிக்கைகளை ஏற்று அதற்கான ஆயுத்த பணிகளை செய்து வருவதாக என்.எல்,சி., அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் ஊராட்சி தலைவர்கள் சண்முகம், பன்னீர்செல்வம், சங்கர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.