UPDATED : அக் 11, 2026 05:21 PM
ADDED : அக் 11, 2026 05:17 PM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் கான்கிரீட் கலவை இயந்திரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விருத்தாசலம் பழமலைநாதர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ரமேஷ், 37. இவர், தனது கான்கிரீட் கலவை இயந்திரத்தை, கடந்த 21ம் தேதி, ஜங்ஷன் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தியிருந்தார்.
சில நாட்கள் சென்று பார்த்தபோது, கலவை இயந்திரத்தை காணவில்லை. தனது சகோதரர், கட்டுமான பணிக்கு எடுத்துச் சென்றிருப்பார் என நினைத்து, தேடாமல் இருந்தார்.
கடந்த 9ம் தேதி, கலவை இயந்திரம் தேவைப்பட்டதால், தம்பியிடம் கேட்டுள்ளார். அவர், நான் பார்க்கவில்லை என தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ், விருத்தாசலம் போலீசார் புகாரளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து, கான்கிரீட் கலவை இயந்திரத்தை திருடிச் சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.
விருத்தாசலத்தில், கடந்த சில மாதங்களாக, வீடுகளுக்கு முன்பு நிறுத்தி வைத்திருந்த டிராக்டர் டிப்பர், மினி லாரி, கலவை இயந்திரம் போன்றவை திருடுபோவதால், பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
