UPDATED : அக் 11, 2026 05:21 PM
ADDED : அக் 11, 2026 05:17 PM
அ நிறம் | அளவு
புதுச்சத்திரம்: தமிழ்நாடு தர்காக்கள் ஜமாத் சார்பில், பெரியப்பட்டு ஆலோடி சாப் தர்காவில், பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.
புவனகிரி தாசில்தார் ஷானாஸ் தலைமை தாங்கினார். தர்காக்கள் ஜமாத் மாவட்ட தலைவர் அஸ்லாம் ரவூபி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சிதம்பரம் சப்.கலெக்டர் தனலட்சுமி பங்கேற்று, டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக, பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார். மேலும், தர்கா வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
தர்காக்கள் ஜமாத் மாநில அமைப்பாளர் முஸ்தபா, ஆலோடி சாப் தர்கா நிர்வாகி காசிம்கான், பள்ளிவாசல் செயலர் அப்துல்கனி, இப்ராஹிம், அப்துல்லா, இமாம், துபைல்அஹமது, அப்துல்கலாம், காதர்ஷெரீப், பைசல்கான், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
