UPDATED : அக் 11, 2026 04:57 PM
ADDED : அக் 11, 2026 04:54 PM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில், இந்து முன்னணி சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கார்த்திக் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் வெங்கடேசன், மணிகண்டன், சரவணன் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சனில்குமார் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், கோர்ட் உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் தீபத் துாணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. செயற்குழு உறுப்பினர்கள் பிச்சாப்பிள்ளை, பெருமாள், ரவிச்சந்திரன், பெரியசாமி, திவாகர், பாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாநகர செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.
