/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணாமலை பல்கலை.,யில் மக்கள் தொகை குறித்த மாநாடு
/
அண்ணாமலை பல்கலை.,யில் மக்கள் தொகை குறித்த மாநாடு
ADDED : பிப் 18, 2024 12:14 AM

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், 'தென்னிந்திய மக்கள் தொகை: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்' என்ற தலைப்பில் தென்மண்டல மாநாடு நடந்தது.
பல்கலைக்கழக மக்களியல் துறை, இந்திய மக்கள் தொகை ஆய்வு சங்கம் சார்பில் நடந்த மாநாட்டில் துணைவேந்தர் கதிரேசன் பங்கேற்று மாநாட்டு மலரை வெளியிட்டு பேசினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு செயல்பாடுகள் மற்றும் குடிமக்கள் பதிவு இயக்குனர் சஜ்ஜன்சிங் சவான் மாநாட்டு கருத்துரையாற்றினார்.
மக்களியல் துறைத் தலைவர் ரவிசங்கர் வரவேற்றார். இந்திய மக்கள் தொகை ஆய்வு சங்க தலைவர் பேராசிரியர் சுரேஷ்சர்மா தலைமையுரையாற்றினார். தெற்கு பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அனில்சந்திரன் மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பொது செயலாளர் உஷாராம் வாழ்த்துரை வழங்கினார்.
பொருளாதார நிபுணர் ஜீதேந்திரயாதவ் நன்றி கூறினார்.
மாநாட்டில், மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஆய்வு மாதிரி குறுதரவு குறித்த ஆராய்ச்சிக்கான பணிக்கூடம் அமைக்க, தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் மற்றும் அண்ணாமலைப் பல்கலை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெடுத்திடப்பட்டது.
தேசிய மக்கள் தொகை அறிவியல் மைய இயக்குநர் சீனுவாசன், தமிழ்நாடு சமூக கொள்கை இயக்குநர் நிரஞ்சன் சாகுர்தி, லக்ஷ்மி நரசிம்மாராவ் குட்லிகி, டாக்டர் ஹனிமிரெட்டி மொடுகு, பேராசிரியர் ராம் மற்றும் மக்கள் தொகை ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர். 54 ஆய்வு கட்டுரைகள், 26 விளக்கக்காட்சிகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.
பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், தொலைதூர மற்றும் ஆன்லைன் கல்விக்கான மைய இயக்குனர் சீனுவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.