/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காங்., ஆர்ப்பாட்டம் எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
காங்., ஆர்ப்பாட்டம் எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : பிப் 08, 2025 07:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கைவிலங்கிட்டு அனுப்பியதை கண்டித்து, விருத்தாசலத்தில் மாவட்ட காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் ரஞ்சித்குமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொருளாளர் ராஜன், மகிளா காங்., மாவட்ட தலைவி லாவன்யா, வட்டார தலைவர்கள் சாந்தகுமார், ராவணன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கண்டன உரையாற்றினார். வட்டார தலைவர்கள் சக்திவேல்ராஜன், பரமசிவம், சக்திவேல், கலைச்செல்வன், மங்கலம்பேட்டை பேரூர் தலைவர் வேல்முருகன் பங்கேற்றனர்.