UPDATED : அக் 08, 2026 08:08 PM
ADDED : அக் 08, 2026 08:06 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் மத்திய, மாவட்ட காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ரங்கமணி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சந்திரசேகரன், மாநகர தலைவர் வேலுசாமி, ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர்கள் சீத்தாராமன், ராமகிருஷ்ணன், ராஜா, மாவட்ட பொதுச் செயலாளர்கள் கிஷோர், காமராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலகி வலியுறுத்தி டில்லியில் போராட்டம் நடத்திய லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர்.
