/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பேச்சு போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு
/
பேச்சு போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு
ADDED : அக் 28, 2024 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி நடந்த மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தார்.
கடலுார் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை மூலம் பள்ளி மாணவர்களுக்கான காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி பேச்சுபோட்டி நடத்தப்பட்டது.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த போட்டியில் நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி புனிதவள்ளி பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்தார்.
அவரை தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி, உதவி தலைமை ஆசிரியர்கள் செந்தில்குமார், தரணிதரன் உட்பட பலர் பாராட்டினர்.