/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : நவ 13, 2024 09:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை; கடலூர் மாவட்ட அளவில் குழு விளையாட்டு போட்டிகள், நெய்வேலி இந்திரா நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இப்போட்டியில், பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 17 வயதிற்குட்பட்ட பிரிவில் பூப்பந்து போட்டியில் முதலிடமும், 19 வயதிற்குட்பட்ட இறகு பந்து போட்டியில் இரண்டாம் இடமும் பெற்று சாதனைப் படைத்தனர்.
மேலும், பூப்பந்து விளையாட்டு போட்டியில் மாநில விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
சாதனைப்படைத்த மாணவர்களை, பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் தமிழ்மணி பாராட்டினர்.

