/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காங்., வர்த்தகத்துறை துணைத் தலைவருக்கு வாழ்த்து
/
காங்., வர்த்தகத்துறை துணைத் தலைவருக்கு வாழ்த்து
ADDED : நவ 01, 2025 02:17 AM

கடலுார்: அகில இந்திய காங்., சிறு, குறு, நடுத்தர தொழில் மற்றும் வர்த்தகத்துறை மாநில துணைத்தலைவர், புனித வளனார் மேல்நிலைப் பள்ளி முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்.
பிரைன் ஜிம் தமிழ்நாடு அகாடமி திறன் வளர்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் நிறுவனர் திருமுகம். அகில இந்திய காங்., சிறு, குறு, நடுத்தர தொழில் மற்றும் வர்த்தகத்துறை மாநில துணைத்தலைவராக நிமிக்கப்பட்டுள்ளார்.
இவர், கடலுார் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் நசியான் கிரகோரியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது அவர் கூறுகையில், 'வேலைதேடுவோரை கண்டறிந்து அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதே எங்களுடைய முதல் பணி.
வரும் நவம்பர் மாத முதல்வார இறுதியில் ஒருநாள் பயிற்சி மற்றும் விளக்க கூட்டம் நடைபெற உள்ளது. ஆண், பெண், இரண்டாம் பாலினம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றும் கருத்தரங்கமாக அமையும்' என்றார். வேலுமணி, மால்மருகன், அருள்ஜோதி, சாய்கிருஷ்ணன், ஜெயராமன், கவிஞர் சுரா உட்பட பலர் அவரை வாழ்த்தினர்.

