/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்ட ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு
/
மாவட்ட ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு
மாவட்ட ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு
மாவட்ட ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பாராட்டு
ADDED : அக் 17, 2025 11:24 PM

கடலுார்: கடலுார் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பில் ஆணழகன் போட்டி நடந்தது.
தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கத்தின் அனுமதியுடன், கடலுார் மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கம் சார்பி ல் மாவட்ட ஆணழகன் போட்டி, மிஸ்டர் கடலுார் 2025 கடந்த 5ம் தேதி நடந்தது. இதில் கடலுாரைச் சேர்ந்த செல்வகணபதி, 60 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று ஜே.ஆர்.பிரிவில் தங்கப்பதக்கம், எஸ்.ஆர்.,பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இதேபோல் அக்.12ம் தேதி, திருப்பூரில் நடந்த தமிழ்நாடு அளவிலான ஆணழகன் போட்டி, அயன்மேன் 2025ல் 60 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று, வெண்கல பதக்கம் வென்றார்.
கடலுார், திருப்பூரில் நடந்த ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை பெற்ற செல்வகணபதியை, சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.