நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: பா.ஜ., எம்.பி., பேச்சை கண்டித்து, விருத்தாசலத்தில் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
லோக்சபா தேர்தலில் 400 இடங்களை பிடித்து மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வரும், அப்போது அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என, பா.ஜ., எம்.பி., ஆனந்தகுமார் பேசியதை கண்டித்து, விருத்தாசலத்தில் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாவட்ட தலைவர் துரைராமலிங்கம் தலைமை தாங்கினார். நகர தலைவர் ரஞ்சித்குமார், தொகுதி தலைவர் செந்தமிழ்செல்வன் முன்னிலை வகித்தனர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கண்டன உரையாற்றினார்.
அதில், சர்ச்சை பேச்சுக்களை நிறுத்திக் கொள்ள வேண்டும். சி.ஏ.ஏ., சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

