/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காங்., எம்.எல்.ஏ., பேச்சு தி.மு.க., வினர் வியப்பு
/
காங்., எம்.எல்.ஏ., பேச்சு தி.மு.க., வினர் வியப்பு
ADDED : ஆக 20, 2025 07:03 AM
வி ருத்தாசலம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மங்கலம்பேட்டை பேரூராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்', நேற்று துவங்கியது.
ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து பேசுகையில், 'மாநிலத்திலேயே முதன் முறையாக சிதம்பரத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தில் 15 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பொது மக்களிடம் மனுக்களை பெற்று, 45 நாட்களுக்குள் தீர்வு காண்பதால், மாநிலம் முழுவதும் ஏராளமானோர் பயனடைகின்றனர்.
மாணவர்கள், பெண்கள், முதியோர் என அனைவருக்கும் சிறப்பு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
இந்த திட்டங்கள் தொடர ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வேண்டும். தேர்தல் கமிஷனே ஓட்டை திருடுகிறது. எனவே, வேறு யார் வந்தாலும் திட்டங்கள் நிறுத்தப்பட்டு விடும்.
ஸ்டாலின் ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்' என்றார். சட்டசபையில் பேச தடுமாறியவர்; கடந்த நான்கரை ஆண்டுகளில் அதிகம் பேசாதவர் என பேசப்பட்ட எம்.எல்.ஏ., சொந்த கட்சியினரை தாண்டி, ஸ்டாலினுக்கு வரிந்து கட்டி பேசியது, வரும் தேர்தலுக்கு அச்சாரமே என தி.மு.க.,வினர் வியப்பில் ஆழ்ந்தனர்.