/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க.,-பா.ஜ., கூட்டணி விவகாரம் காங்., எம்.பி., விஷ்ணுபிரசாத் சாடல்
/
அ.தி.மு.க.,-பா.ஜ., கூட்டணி விவகாரம் காங்., எம்.பி., விஷ்ணுபிரசாத் சாடல்
அ.தி.மு.க.,-பா.ஜ., கூட்டணி விவகாரம் காங்., எம்.பி., விஷ்ணுபிரசாத் சாடல்
அ.தி.மு.க.,-பா.ஜ., கூட்டணி விவகாரம் காங்., எம்.பி., விஷ்ணுபிரசாத் சாடல்
ADDED : ஏப் 13, 2025 05:20 AM

கடலுார் : பா.ஜ., அரசு மீண்டும் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதின் மூலம் பெண்களுக்கு மிகப் பெரிய அநீதியை இழைத்துள்ளது என காங்., எம்.பி., விஷ்ணுபிரசாத் கூறினார்.
கடலுாரில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை காங்., எம்,பி., விஷ்ணுபிரசாத் நேற்று சந்தித்தார். பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடலுார் தொகுதி கீழ்குமாரமங்கலம் பகுதியில் மழைக்காலங்களில் ஆற்று நீர் உள்ளே புகுந்து அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்கவும், கீழ்குமாரமங்கலத்தில் புதிய ரேஷன் கடை அமைக்கவும் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தேன்.
நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. விலைவாசி உயர்ந்துள்ளது. இதை பற்றி பா.ஜ., கண்டு கொள்வதில்லை. மொழி, சாதி மூலமாக மனிதர்களை பிரித்தாலுவது பா.ஜ.,வின் வாடிக்கையாக உள்ளது. அ.தி.மு.க.,-பா.ஜ., கூட்டணி என்பது, தமிழக மக்களுக்கு செய்துள்ள துரோகம். இதற்கு வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். அமைச்சர் பொன்முடி பேச்சு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பெட்ரோல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. மத்திய பா.ஜ., அரசு விவசாயிகளிடம் இருந்து நெல், உளுந்து பயிறு போன்ற உற்பத்தி பொருள்களை அடிமாட்டு விலைக்கு வாங்குவதால் பாதிக்கப்படுகின்றனர்.
பா.ஜ., அரசு காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதின் மூலம் பெண்களுக்கு மிகப் பெரிய அநீதியை செய்துள்ளனர். தமிழத்தில் எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்தாலும், பா.ஜ., வெற்றிப் பெற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். நிர்வாகிகள் உடனிருந்தனர்.

