ADDED : ஜன 12, 2026 03:05 AM

புவனகிரி: மத்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட குளறுபடிகளை கண்டித்து காங்., கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
புவனகிரி பாலக்கரையில் நடந்த போராட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேலன் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணைத்தலைவர் விநாயகம் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சாம்பமூர்த்தி, ஜெமினி ராதா, ரங்கநாதன், இமயராஜ், சிதம்பர நகர தலைவர் மக்கின், மாவட்ட பொருளாளர் வேங்கடகிரி, மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத்தலைவர் செந்தில்நாதன், மாநில செயலாளர் சித்தார்த்தன் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்து பேசினர்.
காங்., கட்சி நிர்வாகிகள் அன்பரசன், வைத்தியநாதசுவாமி, செழியன், பகத்சிங், ரவிச்சந்திரன், ராஜா சம்பத், மகளிர் அணி தலைவர் அஞ்சம்மாள், இளைஞர் காங்,. ஜெயராஜ், அருள்ஜோதி, லட்சுமணன், செல்வம், வேளாங்கண்ணி, குணசேகரன், ஜோதிமணி, சக்கரபாணி, வெங்கடேசன், குமார், ஜனகம் ராதா, வெங்கட், கோகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கவுன்சிலர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

